15 May 2011

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்
மே 2011, தேர்தல் முடிவுகள் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வந்துள்ளது, இதற்கு பல முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன,
அவைகளில் சில
1. தி.மு.க.வின் குடும்ப அரசியல் மற்றும் குடும்ப ஆதிக்கம் - இது பரவலாக தி.மு.க தொண்டர்களே வருத்தப்படும் விஷயம்.
2. 2G அலைகற்றை ஒதிக்கீடு முறைகேடு - இது ஒரு தீர்வுக்கு காத்திருக்கும் வழக்கு.
3. விலைவாசி உயர்வு - இப்பவே கண்ண கட்டுதே!
4. எப்பொழுதும் போல, மாற்று அரசை எதிர்பார்க்கும் மக்கள்
5. ஊழல் மற்றும் லஞ்சம்
6. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை -
7. விஜயகாந்தின் தே.மு.தி.க, அ.தி.மு.க வுடணான கூட்டணி, மற்றும் நடிகர் விஜயின் ஆதரவு - ஒன்னு கூடிட்டாங்கப்பா... ஒன்னு கூடிட்டாங்கப்பா...
8. இறுதியாக, நடிகர் வடிவேலுவின் பேச்சு - வடை போச்சே! , ரொம்ப பேசிட்டனோ? இருக்கட்டும் சமாளிப்போம்!!!
9. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு என்ற மெரினா கடற்கரை உண்ணாவிரதம் - வாங்குன காசுக்கு மேல என்னமா கூவுராண்டா!
10. திரைதுறை ஆதிக்கம் - சொல்லவே இல்ல!

இந்த தேர்தலில் இருந்து என்ன தெரிந்தது?
1. சாதி கட்சிகள் அதிக நாட்கள் இருக்காது, அதாவது இராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சிகள் போல...
2. லேப்டாப், கிரைண்டர் மற்றும் இன்னபிற இலவசங்களை கண்டு மக்கள் ஏமாறமாட்டார்கள் - மெய்யாலுமா சொல்றீங்க
3. அதிகமான இளைஞர்கள் மற்றும் படித்த மக்கள் வாக்களிக்க முன்வந்துள்ளனர் - அது ஏன்?

இந்த தேர்தலில் மக்களுக்கு அ.தி.மு.க மீது விருப்பம் இல்லாவிட்டாலும், தி.மு.க கூட்டணி மீதான வெறுப்பும் மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளைவிட வேறு கட்சிகள் இல்லை என்ற காரணத்தினாலும், அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற காரணம் ஆகிவிட்டது.

கடைசியாக, இந்த புதிய அரசிடம் இருந்து மக்களின் எதிர்பார்ப்புதான் என்ன ?
1. ஒரு சில நல்ல திட்டங்களை முந்தய அரசு தொடங்கிவைத்தது. அவைகளை புதிய அரசு மக்களுக்கு செய்யும் சேவையாக நினைத்து அந்த பணிகளை முடிக்க வேண்டும்.. அவைகளில் சில
அ) சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
ஆ) மக்கள் காப்பீட்டு திட்டம்
மற்றும் சில -
2. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுதல்.
3. விலை வாசி கட்டுப்பாடு
4. கட்டுமாணம்
இதை எல்லாம் பண்ணிமுடிங்க, மத்தத பின்னால பாப்போம்.

பொறுத்திருந்து பார்ப்போம். வரட்டா...

comments plz...

No comments: